விபத்தில் விவசாயி பலி; அண்ணன் படுகாயம்


சேலம் :சேலம், வீராணம் அருகே டி.பெருமாபாளையம் அண்ணா நகரை சேர்ந்த, விவசாயி பெரியசாமி, 45. தையல் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு மனைவி விஜயலட்சுமி, ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர்.

பெரியசாமியின் அண்ணன் முருகேசன், 48. இவரும், பெரியசாமியும், நேற்று ஸ்பிளண்டர் பைக்கில், பொம்மிடியில் வசிக்கும் பெற்றோர் வீட்டுக்கு சென்றனர். பின் அவர்கள் வீட்டுக்கு புறப்பட்டனர். பெரியசாமி, ஹெல்மெட் அணியாமல் ஓட்டினார்.

மதியம், 3:45 மணிக்கு வீராணம், சுக்கம்பட்டி, கோமாளி வட்டம் அருகே சென்றபோது, லாரியை முந்த முயன்றார். அப்போது எதிரே, டீத்துாள் ஏற்றி வந்த சரக்கு லாரி, பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பெரியசாமி, சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த முருகேசனை, மக்கள் மீட்டு, அருகே உள்ள தனியார் மருத்துவ
மனையில் சேர்த்தனர். வீராணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement