ஏரி மதகு கட்டுமான பணிக்காக சாலையில் ஜல்லி கற்கள் குவிப்பு

ஸ்ரீபெரும்புதுார்:வளத்தாஞ்சேரியில், ஏரி மதகு கட்டுமான பணிக்காக கொண்டு வரப்பட்ட ஜல்லி கற்கள், சாலையில் கொட்டி குவிக்கப்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், போந்துார் அடுத்த, தெரேசாபுரத்தில் இருந்து, வளத்தாஞ்சேரி, கண்ணந்தாங்கல் செல்லும் சாலை பிரிந்து செல்கிறது. சுற்றுவட்டார கிராமத்தினர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், வளத்தாஞ்சேரி ஏரி மதகு சேதமடைந்ததை அடுத்து, சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. மதகு கட்டுமான பணிக்காக கொண்டு வரப்பட்ட ஜல்லி கற்கள், வளத்தாஞ்சேரி சாலையில் கொட்டி குவிக்கப்பட்டு உள்ளது.
இதனால், இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், ஜல்லி கற்கள் மீது செல்லும் போது, இடறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், அப்பகுதியில் நிலைத் தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
எனவே, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையில் கொட்டப்பட்டுள்ள ஜல்லி கற்களை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும்
-
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்போம்; ஆதரவு குரல் கொடுக்கிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு ஜாமின்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி
-
விசா தேவையில்லை; பாகிஸ்தான் - வங்கதேசத்திடையே ஒப்பந்தம்; உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா
-
சட்ட விரோதமாக குடியேறிய இலங்கை தொழிலதிபரிடம் திமுக உறுப்பினர் அட்டை!
-
திண்டுக்கல் பொறியாளர் புதுச்சேரியில் மர்ம மரணம்