விவசாயியை தாக்கிய தாசில்தார் உள்பட 8 பேருக்கு அபராதம்

சேலம், சேலம், பெத்தாம்பட்டியை சேர்ந்த, விவசாயி ராஜகணபதி, 46. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த காந்தி தேசாய் என்பவருக்கும் இடையே, 2022 நவம்பரில் நிலப்பிரச்னையால் தகராறு ஏற்பட்டுள்ளது. நில அளவீடுக்கு முயற்சிக்கும்போது மோதலாக மாறியது. இதில் ராஜ

கணபதி காயம் அடைந்தார். இரும்பாலை போலீசார், காந்தி தேசாய், சிங்காரவேலு, முருகன், வேல்
முருகன், கந்தசாமி, கார்த்திகேயன், பச்சியப்பன், வெள்ளையதேவன் மீது வழக்குப்பதிந்தனர். இந்த வழக்கு சேலம் ஜே.எம்.எண்: 1ல் நடந்து வந்தது. அதில், 8 பேருக்கும் தலா, 15,000 ரூபாய் அபராதம் விதித்து, மாஜிஸ்திரேட் திருமால் நேற்று உத்தரவிட்டார். இதில் காந்தி தேசாய், தற்போது ஓமலுார் விமான நிலைய, நில எடுப்பு தனி தாசில்தாராக
பணிபுரிகிறார்.

Advertisement