வனக்கோவிலில் நேற்று தேர்த்திருவிழா துவக்கம்

அந்தியூர், அந்தியூர் அருகே புதுப்பாளையம் குருநாத சுவாமி கோவில் ஆடி பெருந்தேர்த் திருவிழா, அடுத்த மாதம் 13ம் தேதியில் இருந்து 16 வரை நடக்கிறது. குதிரை சந்தை, மாட்டுச்

சந்தையுடன் கோவில் பண்டிகை சிறப்பாக நடக்கும்.

இந்நிலையில், நேற்று வனக் கோவிலில் பூச்சாட்டுதலுடன் தேர் திருவிழா துவங்கியது. பூச்சாட்டுதல் நிகழ்ச்சியில், அந்தியூர் புதுப்பாளையம் சுற்று வட்டார பகுதிகளை சேர்த்த, 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 30ம் தேதி கொடியேற்றமும், அடுத்த மாதம் 6ம் தேதி முதல் வன பூஜையும் நடக்கிறது.

Advertisement