குண்டேரிப்பள்ளத்தில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு

ஈரோடு, கோபி தாலுகா, கொங்கர்பாளையம் கிராமம், குண்டேரிப்பள்ளம் நீர் தேக்கத்தில் இருந்து வலது மற்றும் இடது கரை வாய்க்கால் மூலம் பாசனம் பெறும், 2,498 ஏக்கர் புஞ்சை பாசன நிலங்களுக்கு சிறப்பு நனைப்புக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.


இத்தண்ணீர் இன்று (24) முதல், 30 வரை, 7 நாட்களுக்கு, 14.515 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், அணையின் நீர் இருப்பு, நீர் வரத்துக்கு ஏற்ப தண்ணீர் திறந்துவிட அனுமதி அளித்து, அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement