ரத யாத்திரைக்காக புனித நீர் எடுப்பு

பவானி,இந்து பாதுகாப்பு படையின் ரத யாத்திரை, கொடுமுடியில் இன்னும் சில நாட்களுக்குள் துவக்கப்பட உள்ளது. முன்னதாக ரதம் கட்டும் பணி துவங்குவதற்காக, தமிழகத்தில் உள்ள அனைத்து புனித நதிகளுக்கும் சென்று,


இந்து பாதுகாப்பு படையினர், புனித நீர் எடுத்து வருகின்றனர். அந்த வகையில், நேற்று பவானி கூடுதுறைக்கு வந்த மாநில தலைவர் கண்ணன் தலைமையில், புனித நீர் எடுக்கப்பட்டது. ஆன்மிக பிரிவு மாநில செயலாளர் அமிர்த கிருஷ்ண சுவாமிகள், மடாதிபதி சிவஸ்ரீ வெங்கட்ராஜ் சுவாமிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement