ஆர்ப்பாட்டம்

உத்திரமேரூர்:பொற்பந்தலில் பணி நீக்கம் செய்த தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்கக்கோரி, சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்திரமேரூர் தாலுகா, பொற்பந்தல் கிராமத்தில், 'பியூர் பெட்ரோகேம்' தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. வாகனங்களுக்கு தேவைப்படும் கிரீஸ் தயாரிக்கும் இந்த தொழிற்சாலையில், 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில், 2021ல் தொழிற்சங்கம் தொடங்கியதற்காக, 10 நிரந்தர பணியாளர்களை தொழிற்சாலை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. இது தொடர்பாக, தொழிலாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். பணி நீக்கம் செய்யப்பட்ட 10 நிரந்தர பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், பணி வழங்க தொழிற்சாலை நிர்வாகம் மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து, சி.ஐ.டி.யூ., பியூர் பெட்ரோ தொழிலாளர் சங்கம் சார்பில், பொற்பந்தலில் தொழிற்சாலை முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்கத் தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். சங்க மாவட்ட செயலர் முத்துகுமார் கண்டன உரையாற்றினார். அதை தொடர்ந்து, 10 நிரந்தர தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்ப்பது, பின் தேதியிட்ட சம்பள பாக்கியை உடனே வழங்குவது குறித்த நீதிமன்ற தீர்ப்பை உடனே அமல்படுத்த தயக்கம் காட்டும், தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேலும்
-
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்போம்; ஆதரவு குரல் கொடுக்கிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு ஜாமின்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி
-
விசா தேவையில்லை; பாகிஸ்தான் - வங்கதேசத்திடையே ஒப்பந்தம்; உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா
-
சட்ட விரோதமாக குடியேறிய இலங்கை தொழிலதிபரிடம் திமுக உறுப்பினர் அட்டை!
-
திண்டுக்கல் பொறியாளர் புதுச்சேரியில் மர்ம மரணம்