அதிக சத்தத்துடன் வட்டம் விமானத்தால் பதற்றம்

சேலம், சேலம் நகர் பகுதியில் நேற்று காலை, 9:45 மணிக்கு, பயங்கர சத்தத்துடன் விமானம் ஒன்று வட்டமடித்தபடி சுற்றியது. குறிப்பாக, 3 முறை வலம் வந்து சென்றது. அதன் சத்தம் அதிகளவில் இருந்ததால், மக்கள், சிறுவர், சிறுமியர், வீட்டு மாடிகளுக்கு சென்று, விமானத்தை பார்வையிட்டனர். 'பைட்டர் ஜெட்' விமானம், 30,000 மீ., உயரத்துக்கு மேல், அரை மணி நேரமாக பறந்து சத்தம் கேட்டதால், மக்கள் பதற்றம் அடைந்தனர். பின் வேகமாக விமானம் பறந்து, சில நிமிடங்களில் மறைந்தது.

இதுகுறித்து சேலம் விமான நிலைய இயக்குனர் வைதேகிநாதன் கூறுகை யில், ''இந்திய விமான படைக்கு சொந்தமான விமானம் பயிற்சியில் ஈடுபட்டது. காலை, 8:00 முதல், 11:00 மணி வரையும், இரவிலும் இதுபோன்று பயிற்சி நடக்கும்,'' என்றார்.

Advertisement