குடிநீர் குழாய் சீரமைப்பு பணி: நெடுஞ்சாலையில் நெரிசல்

ஆவடி:ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலை நடந்த குடிநீர் குழாய் சீரமைப்பு பணியால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், கடந்த மாதம் புதை மின் வடம் அமைக்கும் பணி நடந்தது.

பணியின்போது, ஜெ.பி., எஸ்டேட் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, வசந்தம் நகர் வரை 1 கிலோ மீட்டருக்கு, சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். அப்போது, ஆவடி மாநகராட்சி ஊழியர்கள், தற்காலிகமாக உடைப்பை சரி செய்தனர்.

இந்நிலையில், மேற்கண்ட நெடுஞ்சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, 2 லட்சம் ரூபாய் செலவில் உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்கும் பணியில், மாநகராட்சி ஊழியர்கள் நேற்று காலை ஈடுபட்டனர்.

இந்த பணியால், ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலை, நேற்று மதியம் வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tamil News
Tamil News

பூந்தமல்லியில் இருந்து ஆவடி செல்லும் மார்க்கத்தில் 2 கி.மீ., துாரத்துக்கு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. ஆவடி போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement