கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ்: வீட்டின் மீது மோதியதில் சிறுமி பலி
தர்மபுரி, தர்மபுரி அருகே, ஸ்டீயரிங் பழுதாகி கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ், வீட்டின் மீது மோதியதில், 4 வயது சிறுமி பலியானார்.
தர்மபுரி அடுத்த நுாலஹள்ளி
யில் இருந்து, தர்மபுரி நோக்கி நேற்று காலை, 9:30 மணிக்கு, 2பி எண் அரசு டவுன் பஸ் வந்து கொண்டிருந்தது. தேவராஜ், 45, என்பவர் பஸ்சை ஓட்டினார். பஸ்சில் கண்டக்டர் உட்பட, 10க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். உழவன்கொட்டாய் அருகே பஸ் வந்தபோது, ஸ்டீயரிங் பழுதானதால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரமிருந்த பூ வியாபாரி ராமு என்பவரது வீட்டின் மீது மோதி நின்றது.
இதில், பஸ்சின் முன்பகுதி மற்றும் வீட்டின் ஒரு பகுதி மிகவும் சேதமானது. சம்பவத்தில் வீட்டிலிருந்த அதே பகுதியை சேர்ந்த நரசிம்மன் - சோனியா தம்பதியின் மகள் ஹத்விகா, 4, மற்றும் பஸ் டிரைவர் தேவராஜ் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, ஹத்விகா உயிரிழந்தார். அதியமான் கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்திற்கு காரணம்
விபத்தில் சிக்கிய அரசு பஸ்சை காலை, 11:00 மணிக்கு போலீசார் எடுத்துச் செல்ல முயன்றனர். அப்போது, பொதுமக்கள் பஸ்சை எடுக்க விடாமல், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், உழவன்கொட்டாய் வழித்தடத்தில் இயக்கப்பட்ட வழித்தடம் எண், 40 அரசு டவுன் பஸ் பழுதானதால், அதற்கு மாற்றாக, 2பி பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ் நல்லம்பள்ளி அடுத்த, நாகாவதி அணை அருகே, கடந்த, ஜூன், 13ல் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த தனியார் கல்லுாரி பஸ் மீது மோதியது. இதில், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஏற்கனவே விபத்துக்குள்ளான பஸ்சை மீண்டும் பெயரளவிற்கு சரிசெய்து, மாற்று பஸ்சாக இயக்க அதிகாரிகள் உத்தரவிட்டதே விபத்திற்கு காரணம் எனவும், பழுதான பஸ்சை இயக்க அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, உழவன் கொட்டாய் பஸ் ஸ்டாப் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், தர்ம
புரி தாசில்தார் சவுகத் அலி பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி
யளித்தார். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள், மதியம், 2:00 மணிக்கு கலைந்து சென்றனர்.
சம்பவ இடம் வந்த பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, பலியான குழந்தையின் குடும்பத்திற்கு, 25 லட்சம் ரூபாய், தமிழக அரசு இழப்பீடு வழங்குவதுடன், நல்ல நிலையிலுள்ள பஸ்களை இயக்க வலியுறுத்தினார்.
மேலும்
-
நீண்ட காலம் பிரதமர் பதவி: இந்திராவை பின்னுக்கு தள்ளினார் மோடி
-
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்போம்; ஆதரவு குரல் கொடுக்கிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு ஜாமின்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி
-
விசா தேவையில்லை; பாகிஸ்தான் - வங்கதேசத்திடையே ஒப்பந்தம்; உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா
-
சட்ட விரோதமாக குடியேறிய இலங்கை தொழிலதிபரிடம் திமுக உறுப்பினர் அட்டை!