'காஸ்' ஏஜன்சி ஊழியர் கொலை மனைவி, கள்ளக்காதலன் கைது

பெரும்பாக்கம்,:'காஸ்' ஏஜன்சி ஊழியர் கொலை வழக்கில், மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீ சார் கைது செய்தனர்.
பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பேருந்து நிறுத்தத்தில், கடந்த 19ம் தேதி காலை ஒருவர் காயங்களுடன் இறந்து கிடப்பதாக, பெரும் பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.
போலீசார், அங்கு நின்ற டி .வி.எஸ்., - எக்ஸ்.எல்., மொபட் எண்ணை வைத்து விசாரித்தனர். அதில், இறந்து கிடந்தவர் எழில் நகர், 105வது பிளாக், 2வது மாடியில் வசித்த பழனிசாமி, 45, என்பதும், ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள 'காஸ்' ஏஜன்சியில் பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது. இவரது மனைவி வீரலட்சுமி. இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
விசாரணைக்கு பின் போலீசார் கூறியதாவது:
வீரலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி, மூன்று குழந்தைகள் இருந்த நிலையில், கணவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளார். அதன்பின், பழனிசாமியுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார்.
ஏழு மாதங்களுக்கு முன், செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அசோக் குமார், 45, என்பவருடன், வீரலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது பழனிசாமிக்கு தெரியவர, தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
அசோக்குமாரிடம், தன்னை தினமும் கணவர் பழனிசாமி அடிப்பதாக கூறி வீரலட்சுமி அழுதுள்ளார். இந்த நிலையில், பேருந்து நிறுத்தத்தில் படுத்திருந்த பழனிசாமி மீது கல்லை போட்டு, அசோக்குமார் கொன்றதும் தெரிய வந்தது.
வீரலட்சுமி மற்றும் அவரது கள்ளக்காதலன் அசோக்குமாரை கைது செய்தனர்.
மேலும்
-
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்போம்; ஆதரவு குரல் கொடுக்கிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு ஜாமின்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி
-
விசா தேவையில்லை; பாகிஸ்தான் - வங்கதேசத்திடையே ஒப்பந்தம்; உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா
-
சட்ட விரோதமாக குடியேறிய இலங்கை தொழிலதிபரிடம் திமுக உறுப்பினர் அட்டை!
-
திண்டுக்கல் பொறியாளர் புதுச்சேரியில் மர்ம மரணம்