ஊஞ்சல் உற்சவம்

செஞ்சி: முத்து மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

இதை முன்னிட்டு காலை 10:00 மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பகல் 12:00 மணிக்கு அம்மனுக்கு பால் மற்றும் விசேஷ அபிஷேகம், ஆராதனை நடந்தது.

மாலை 5:00 மணிக்கு ஊரணி பொங்கலும், இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் தாலாட்டும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

Advertisement