சிட்கோ இடத்தில் கட்டடம் கிராம மக்கள் எதிர்ப்பு

திண்டிவனம்: சிட்கோ இடத்தில் கட்டடம் கட்ட, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
திண்டிவனம் அருகே வெண்மணியாத்துார் கிராமத்தில் சிட்கோ தொழிற்பேட்டை, 40 ஏக்கர் பரப்பளவில் கடந்த 2018 ல் அமைக்கப்பட்டது. இந்த இடத்தில் பலர் தொழிற்சாலைகள் கட்டியுள்ளனர்.
இந்த இடத்தில் தனியார் ஒருவருக்கு, 14 சென்ட் இடம் சிட்கோ மூலம் கிரையம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் கம்பெனி அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்தது.
இந்த இடத்தை வெண்மணியாத்துார் கிராம மக்கள் சமுதாய கூடம் கட்டுவதற்கு தருமாறு கேட்டனர். இதற்கு வருவாய்த்துறை வேறு இடம் ஒதுக்குவதாக கூறியும், கிராம மக்கள் அந்த இடத்தை கேட்டனர்.
இந்நிலையில் அந்த இடத்தில் தனியார் நிறுவனத்தினர், கட்டடம் கட்டும் பணி துவங்க நேற்று காலை வந்தனர்.
அப்போது ஊர் மக்கள் சிலர் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து சம்பவ இடத்தில் ரோஷணை மற்றும் வெள்ளிமேடுப்பேட்டை போலீசார், குவிக்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு விழுப்புரம் சிட்கோ கிளை மேலாளர் முகமதாபேகம் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் கட்டடம் அமைக்கும் பணிமேற்கொள்ளப்பட்டது.
மேலும்
-
மாநகராட்சி கமிஷனர், துறை செயலருக்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்
-
நீண்ட காலம் பிரதமர் பதவி: இந்திராவை பின்னுக்கு தள்ளினார் மோடி
-
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்போம்; ஆதரவு குரல் கொடுக்கிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு ஜாமின்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி
-
விசா தேவையில்லை; பாகிஸ்தான் - வங்கதேசத்திடையே ஒப்பந்தம்; உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா