விளையாட்டு சங்கங்களுடன் கலெக்டர் ஆலோசனை

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அனைத்து விளையாட்டு சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். இதில், விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள உள்விளையாட்டரங்கம், நீச்சல் குளம் மற்றும் கீழ்ப்பெரும்பாக்கம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சிறப்பு வசதிகள் மேற்கொள்வது தொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், உள்விளையாட்டரங்க போட்டிகளான ஜூடோ, ஜிம்னாஸ்டிக், கராத்தே, வாள் சண்டை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுக்கு பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சிகளை வழங்குவது தொடர்பாகவும், வெளிவிளையாட்டரங்க விளையாட்டுப் போட்டிகளான கால்பந்து, கையுந்துப்பந்து, கூடைப்பந்து, மட்டைப்பந்து மற்றும் தடகளப்போட்டிகள் ஆகிய போட்டிகளுக்கு தேவையான மைதானங்களில் கூடுதல் அடிப்படை வசதிகள் மேற்கொள்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், கிராமப்புறங்களில் உள்ள விளையாட்டு வீரார்களுக்கு பயிற்சிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் அனைத்து விளையாட்டு சங்கங்களின் சார்பில் மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம், மாவட்டத்தில் சிறுவிளையாட்டு மைதானம் அமைப்பது மற்றும் இடம் தேர்வு செய்யப்பட்டது குறித்து ஆலோசிக்கப்பட்டது என்றார்.

அப்போது, உதவி கலெக்டர் (பயிற்சி) வெங்கடேஷ்வரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement