உண்டியல் காணிக்கை திருட முயற்சி 2 சிறார் உட்பட 3 பேர் கைது
மூங்கில்துறைப்பட்டு: ராவத்தநல்லுார் சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் சினிமா பாணியில் திருடச் சென்ற 2 சிறார்கள் உட்பட மூவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த ராவத்தநல்லுார் சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலின் முன்பு தெரு நாய்கள் அதிக சத்தம் எழுப்பியது.
அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது, 5 பேர் கொண்ட கும்பல், உண்டியலில் உள்ள காணிக்கை பணத்தை குச்சியில் பபுள்கம் ஒட்டி திருட முயற்சி செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
பொதுமக்கள் சுற்றி வளைத்தபோது, 2 பேர் தப்பியோடினர். பிடிப்பட்ட 3 நபர்களை வட பொன்பரப்பி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், உண்டியல் திருட்டில் ஈடுபட்டது, புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தனபால் மகன் சக்தி, 22; புத்திராம்பட்டு பகுதியை சேர்ந்த தாண்டவன் மகன் அன்பழகன், 20; ராமகிருஷ்ணன் மகன் யோகன், 20; மற்றும் 15 வயது சிறுவர்கள் இருவர் என தெரியவந்தது.
இதில் யோகனை கைது செய்த போலீசார், 2 சிறார்களை சிறுவர் சீத்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.
தலைமறைவாக உள்ள சக்தி, அன்பழகனை தேடி வருகின்றனர்.
மேலும்
-
தந்தையுடன் செல்ல ரூ.1 கோடி கேட்ட சிறுமி; தாயை கண்டித்த உச்ச நீதிமன்றம்
-
மாநகராட்சி கமிஷனர், துறை செயலருக்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்
-
நீண்ட காலம் பிரதமர் பதவி: இந்திராவை பின்னுக்கு தள்ளினார் மோடி
-
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்போம்; ஆதரவு குரல் கொடுக்கிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு ஜாமின்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி