கோட்டையம்மன் கோயில் பால்குடம்

தேவகோட்டை: தேவகோட்டை எல்லை காவல் தெய்வமான கோட்டையம்மன் கோயிலில் ஆடித்திருவிழா நடந்து வருகிறது. ஆடி வெள்ளியான நேற்று நகர மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து கோட்டையம்மன் கோயில் வந்து பீடத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

மாலையில் பக்தர்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் இருந்து தட்டுக்களில் பூக்கள் எடுத்து முக்கிய வீதிகளில் வழியாக வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் செய்தனர்.

Advertisement