'கடல் உணவு பொருள் ஏற்றுமதி பிரிட்டனுக்கு 70% அதிகரிக்கும்' மத்திய அரசு கணிப்பு

புதுடில்லி: பிரிட்டனுடனான தாராள வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, அந்நாட்டுக்கான, இந்திய கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி 70 சதவீதம் வரை அதிகரிக்கக் கூடும் என, மத்திய அரசு கணித்துள்ளது.



இந்தியா மற்றும் பிரிட்டன் பிரதமர்களின் முன்னிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், கடந்த 24ம் தேதி கையெழுத்தானது.


@twitter@https://x.com/dinamalarweb/status/1949275825494196251twitter

இந்த ஒப்பந்தத்தின் படி, 99 சதவீத இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு பூஜ்ஜிய வரி அதாவது, வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது பிரிட்டன் சந்தையில், இந்திய கடல் உணவுப் பொருட்களின் போட்டியை அதிகரித்துள்ளது.

Advertisement