மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
மகா ருத்ராபிஷேகம் ஆர்.எஸ்.புரம், டி.பி.,ரோடு, ராஜஸ்தானி சங்கத்தில், மகா ருத்ராபிஷேகம் நடக்கிறது. காலை, 11:00 மணி முதல் அபிஷேகமும், மாலை, 5:00 மணி முதல், மகா ருத்ராபிஷேகம் நடக்கிறது. மாலை, 6:30 முதல் இரவு, 7:00 மணி வரை, மகா தீபாராதனை மற்றும் மகா பிரசாதம் நடக்கிறது.
சாதுர்மாஸ்ய விரத மகோற்சவம் ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில், வேத வியாச பூஜை மற்றும் சாதுர்மாஸ்ய விரத மகோற்சவம் காலை, 9:30 மணி முதல் நடக்கிறது. குமாரி ஆர்யா விவேக் மற்றும் குழுவினரின் வாய்ப்பாட்டு கச்சேரி நடக்கிறது.
ஆராதனை விழா சத்ய சாய் சேவா நிறுவனங்கள் மற்றும் ஆர்.எஸ்.புரம், ஸ்ரீ சத்யா சாய் சேவா சமிதி சார்பில், சாய் யோகலிங்க லோக சேக்ஷம ஆராதனை விழா நடக்கிறது. ஆர்.எஸ்.புரம், ராமலிங்க சவுடேஸ்வரி ஹாலில் காலை, 5:15 மணி முதல் மதியம், 1:15 மணி வரை நடக்கிறது.
கம்பராமாயண சொற்பொழிவு ராம்நகர், ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் சார்பில், ஆடி உற்சவத்தை முன்னிட்டு கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு நடக்கிறது. மாலை, 6:30 முதல் நடக்கும் நிகழ்வில், திருச்சி கல்யாணராமன் சிறப்பு சொற்பொழிவாற்றுகிறார்.
சிறந்த மாணவர்களுக்கு கவுரவம் தேவாங்க மேல்நிலைப்பள்ளி 1975ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடக்கிறது, பள்ளி வளாகத்தில் காலை, 11:00 மணிக்கு நடக்கும் விழாவில், பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் சிறந்த ஆசிரியர்கள் கவுரவிக்கப்படுகின்றனர்.
அரசு மாணவர்களுக்கு உதவிகள் டி.டி.ஆர்., வெங்கட்ரமணன் டிரஸ்ட் சார்பில், மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கும் விழா தடாகம் ரோடு, இடையர்பாளையம், வி.ஆர்.ஜி., திருமண மஹாலில் நடக்கிறது. 50 மாநகராட்சி மற்றும் அரசுப்பள்ளி மாணவர்கள் 1,250 பேருக்கு சீருடைகள் வழங்கப்படுகிறது.
முப்பெரும் விழா தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சங்கம் சார்பில் முப்பெரும் விழா, பி.எம்.என்., சுபாசுப்பிரமணியம் விக்னேஷ் மஹாலில், காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. ஆண்டு துவக்க விழாவுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படுகிறது.
கோவை புத்தகத் திருவிழா மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித் துறை மற்றும் கொடிசியா இணைந்து, கோவை புத்தகத் திருவிழாவை, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடத்துகின்றன. காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை கண்காட்சியை பார்வையிட்டு புத்தகங்களை வாங்கலாம்.
வீல்சேர் கிரிக்கெட் பிரீமியர் தமிழக வீல்சேர் கிரிக்கெட் அசோசியேசன் சார்பில், தமிழ்நாடு வீல்சேர் கிரிக்கெட் பிரீமியம் டிராபி போட்டி நடக்கிறது. உருமாண்டம்பாளையம், கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், காலை, 8:00 மணிக்கு நடக்கிறது .
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சரவணம்பட்டி, கே.ஜி., கலை அறிவியல் கல்லுாரி சார்பில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடக்கிறது. கல்லுாரி வளாகத்தில் காலை, 10:00 மணிக்கு நடக்கும் நிகழ்வில் பாடகர்கள் ரேஷ்மா, அரவிந்த் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
விழிப்புணர்வு மராத்தான் வி.ஜி.எம்., மருத்துவமனை சார்பில், 'கல்வி, விளையாட்டு மற்றும் ஆரோக்கியம்', 'சாலை பாதுகாப்பு நம் உரிமை' போன்ற கருத்துக்களை வலியுறுத்தி மராத்தான் நடக்கிறது. வ.உ.சி., மைதானத்தில், காலை, 5:30 மணி முதல் நடக்கிறது.
மறைமலையடிகள் விழா உலகத் தமிழ் நெறிக்கழகம் சார்பில், மறைமலையடிகள் விழா நடக்கிறது. அரசு மருத்துவமனை எதிரில், ரயில்வே குடியிருப்பு வளாகம் பொறியாளர் இல்லத்தில் காலை, 9:30 மணிக்கு நடக்கிறது.
திருக்கல்யாண உற்சவம் பொள்ளாச்சி ரோடு, எல்.ஐ.சி., காலனி பின்புறம், எம்.ஜி.ஆர்., நகர், சப்தகிரி வேங்கடேஸ்வரர் கோவிலில் ஆடி மாத உற்சவம் நடக்கிறது. இதையாட்டி, ஸ்ரீதேவி, பூதேவி சப்தகிரி வேங்கடேசப் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
ஆன்மிகமும் ஆரோக்கியமும் கோவை இயற்கை நலச் சங்கம் சார்பில், இலவச ஆரோக்கிய விழிப்புணர்வுக் கூட்டம், அண்ணா சிலை எதிரே, டி.கே.பி., சேம்பரில் காலை, 10:30 மணிக்கு நடக்கிறது. 'முழுமையான வாழ்க்கைக்கு ஆன்மிகமும், ஆரோக்கியமும்' என்ற தலைப்பில் சிறப்புரை நடக்கிறது.
பாராட்டு விழா கொங்கு நண்பர்கள் சங்கத்தின் சார்பில், 2024-25ம் கல்வியாண்டில் பிளஸ்2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடக்கிறது. நவஇந்தியா, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் காலை, 9:30 மணிக்கு நிகழ்ச்சி நடக்கிறது.
மனமே மந்திரச்சாவி செட்டிபாளையம், ஹைவேஸ் ரோடு, தாமரைக் கோவிலில், 86வது மாதாந்திர கூட்டம் மாலை, 6:00 முதல் நடக்கிறது. இதில், 'மனமே உடல் நலத்தின் மந்திரச் சாவி' என்ற தலைப்பில் சிறப்புரை நடக்கிறது. அனுமதி இலவசம்.
அமைதியின் அனுபவம் தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங் நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.
மேலும்
-
அமெரிக்காவில் ஓடுபாதையில் போயிங் விமானம் தீப்பிடித்தது; பயணிகள் தப்பினர்!
-
தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் மாநில அரசு அளித்த 5 கோரிக்கைகள் என்னென்ன?
-
அமெரிக்காவில் 11 பேருக்கு கத்திக்குத்து; சந்தேக நபர் கைது
-
லாரிடயர்கள் திருடிய மூவர் கைது
-
நீர் நிலைகளில் குளிப்பதை தவிர்க்க கலெக்டர் அறிவுரை
-
மக்கள் மன்றம் நிகழ்ச்சி