சிங்கம்புணரியில் டயாலிசிஸ் மையம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர்சிதம்பரம் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 65 லட்சம் செலவில் கட்டப்பட்ட டயாலிசிஸ் சென்டர் திறப்பு விழா கலெக்டர் பொற்கொடி தலைமையில் நடந்தது.
அமைச்சர் பெரியகருப்பன், கார்த்தி எம்.பி., முன்னிலை வகித்தனர். முன்னாள் மத்திய அமைச்சர்சிதம்பரம் எம்.பி., டயாலிசிஸ் மையத்தை திறந்து வைத்தார். அப்போது அவர், அரசு கட்டடங்கள் நீண்ட காலம் தாக்கு பிடிக்கும் வகையில் ஒப்பந்தக்காரர்கள் தரமாக கட்ட வேண்டும் என்றார்.
ஒப்பந்ததாரர் சரவணனுக்கு சிதம்பரம் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். விழாவில் தலைமை மருத்துவர் அயன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., ராம.அருணகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருப்புத்துார்: திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் எம்.பி., தொகுதி மேம்பாடு நிதி ரூ 63 லட்சத்தில் ரத்த சுத்திகரிப்பு மையக் கட்டடத்திற்கான பூமி பூஜை நடந்தது.
கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலை வகித்தார்.
சிதம்பரம் எம்.பி., கார்த்தி எம்.பி.,மருத்துவ இணை இயக்குநர் அருள்தாஸ், பேரூராட்சி தலைவர் கோகிலாராணி,காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
அமெரிக்காவில் ஓடுபாதையில் போயிங் விமானம் தீப்பிடித்தது; பயணிகள் தப்பினர்!
-
தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் மாநில அரசு அளித்த 5 கோரிக்கைகள் என்னென்ன?
-
அமெரிக்காவில் 11 பேருக்கு கத்திக்குத்து; சந்தேக நபர் கைது
-
லாரிடயர்கள் திருடிய மூவர் கைது
-
நீர் நிலைகளில் குளிப்பதை தவிர்க்க கலெக்டர் அறிவுரை
-
மக்கள் மன்றம் நிகழ்ச்சி