உணவகங்கள் முன் 'பார்க்கிங்' நெடுஞ்சாலையில் அபாயம்

திருமழிசை,:சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையோர உணவகங்கள் முன் நிறுத்தப்படும் வாகனங்களால், மற்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில், செம்பரம்பாக்கம் - சுங்குவார்சத்திரம் வரை ஏராளமான உணவகங்கள் உள்ளன. இவ் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், இணைப்பு சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு உணவருந்த செல்வர்.
இதில் திருமழிசை, குத்தம்பாக்கம், செட்டிபேடு, தண்டலம், இருங்காட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்களுக்கு வரும் கனரக வாகன ஓட்டிகள், இணைப்பு சாலையில் செல்லாமல், நெடுஞ்சாலையோரம் ஆபத்தாக வாகனங்களை நிறுத்தி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதனால், அவ்வழியே வேகமாக வரும் மற்ற வாகன ஓட்டிகள், சாலையோரம் நிற்கும் கனரக வாகனங்களால் சிரமப்பட்டு வருகின்றனர். சில சமயங்களில், சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது, பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்தில் சிக்குகின்றன.
எனவே, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார், நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
அமெரிக்காவில் ஓடுபாதையில் போயிங் விமானம் தீப்பிடித்தது; பயணிகள் தப்பினர்!
-
தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் மாநில அரசு அளித்த 5 கோரிக்கைகள் என்னென்ன?
-
அமெரிக்காவில் 11 பேருக்கு கத்திக்குத்து; சந்தேக நபர் கைது
-
லாரிடயர்கள் திருடிய மூவர் கைது
-
நீர் நிலைகளில் குளிப்பதை தவிர்க்க கலெக்டர் அறிவுரை
-
மக்கள் மன்றம் நிகழ்ச்சி