குறைந்த விலை வாகை மரச்செக்கு எண்ணெய் எஸ்.எஸ்., ஆயில் மில்லில் விற்பனை

கடலுார்: கடலுார் எஸ்.எஸ்., ஆயில் மில்லில் 10ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, சிறப்பு தள்ளுபடியில் தரமான எண்ணெய் விற்கப்படுகிறது என உரிமையாளர் ரவி கூறினார்.
இதுகுறித்து அவர், மேலும் கூறியதாவது:
வாகை மரச்செக்கு எண்ணெய்யை கடலுாரில் முதன்முதலில் அறிமுகம் செய்து பிரபலபடுத்தியது எஸ்.எஸ்., ஆயில் மில்தான். ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெற்ற இந்நிறுவனத்தில் எண்ணெய் வாங்க கடலுார், விழுப்புரம், புதுச்சேரி, சிதம்பரம் வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
10ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி அனைத்து எண்ணெய் வகைகளும் சிறப்பு தள்ளுபடி விலையில் தரமானதாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், புங்கன் எண்ணெய், கடுகு எண்ணெய், பஞ்சதீப எண்ணெய், நாட்டுப்பசு நெய் கிடைக்கிறது.
விழாக்கால சலுகையின் போது, இலவச டோர் டெலிவரி வசதி உண்டு. கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போடி செட்டித்தெருவில் பிரதான கடையும், கடலுார், முதுநகர் சங்கரன் தெரு மற்றும் மஞ்சக்குப்பம் நேதாஜி தெருவில் கிளைகளும் உள்ளன என்றார்.