திருத்தணி தளபதி பள்ளி யோகாசனத்தில் சாம்பியன்

திருத்தணி:மாவட்ட அளவில் நடந்த யோகாசன போட்டிகளில், திருத்தணி தளபதி பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பே ட்டை அடுத்த எஸ்.வி.ஜி.புரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், 'யோகா ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன்' சார்பில், மாவட்ட அளவிலான யோகாசன போட்டிகள் நடந்தன.

இதில், மாவட்டத்தில் இருந்து, 40க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டிகள், 6, 8, 10 மற்றும் 12 வயதுடைய மாணவர்கள் இடையே நடந்தன.

இதில், திருத்தணி தளபதி கே.விநாயகம் மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியர் வெற்றி பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். இதை தொடர்ந்து, மாணவர்களுக்கு பரிசுகள் கோப்பைகள் வழங்கப்பட்டன.

Advertisement