இடையூறு இல்லாமல் ரயில்வே முகப்பை பராமரிக்க அறிவுரை

சேலம்: சேலம் ரயில்வே ஸ்டேஷனில், 45 கோடி ரூபாய் மதிப்பில், 'அம்ரித் பாரத்' திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்பணிகளை, கோட்ட மேலாளர் பன்னாலால் நேற்று ஆய்வு செய்து பயணியருக்கு அடிப்படை வசதி
கள், ரயில் நிலைய முகப்பில் ஏற்படுத்தப்படும் மாற்றத்தை பார்வை

யிட்டார்.

பயணியர் வரும் வாகனங்கள் நிறுத்துமிடம், முன்பகுதியில் பஸ், கார், ஆட்டோ போன்ற வாகனங்களில் வரும் பயணியருக்கான இடத்தை பார்வையிட்டு, பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். தினமும் ஆயிரக்கணக்கில் பயணியர் வருவதால் அவர்கள் வந்து செல்வதில் இடையூறு இல்லாதபடி, முன்பகுதியை பராமரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கோட்ட கூடுதல் மேலாளர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement