எட்டுக்கை அம்மன் கோவிலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மலை வாசஸ்தலமான கொல்லி-மலை, சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. விடுமுறை நாட்-களில், தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்-றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
தற்போது, விட்டு விட்டு மழை பெய்து வருவதால், கொல்லி-மலை முழுவதும் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. விடுமுறை நாளான, நேற்று கொல்லிமலையில் உள்ள எட்டுக்கை அம்மன் கோவிலில் சுற்றுலா பயணிகள் ஏராள-மானோர் குவிந்தனர்.
அங்குள்ள அம்மனை தரிசனம் செய்து விட்டு, ஆகாய கங்கை நீர்-வீழ்ச்சி, நம்மருவி, மாசிலா அருவி, சிற்றருவி, படகு இல்லம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பொழுதை கழித்தனர். சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு கீழே வரும்போது சோளக்காட்டில் உள்ள பழங்குடியினர் சந்தையில் கொல்லிமலை வாழைப்பழம், பலாப்பழம், அன்னாசி பழம் மற்றும் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிச் சென்றனர்.
மேலும்
-
45,788 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கல் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
-
போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு
-
ராயனுார் சாலையில் 'இருட்டு' கூடுதல் மின்விளக்கு தேவை
-
கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப்பில் அரசு பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை
-
மாயனுார் காவிரி ஆற்றில் கூடுதல் நீர்வரத்து: மக்களுக்கு எச்சரிக்கை
-
சூரிய சக்தி பம்பு செட் மானியம்: 72 பேருக்கு வழங்கல்