குட்கா விற்றவர் கைது

ப.வேலுார்: பரமத்தி அருகே, புலவர்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே உள்ள கடைகளில் குட்கா பொருட்களை விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பரமத்தி எஸ்.ஐ., பொன்குமார் மற்றும் போலீசார் கொண்ட குழு, புலவர்பாளையத்தில் உள்ள டீ, மளிகை கடை, பெட்டி கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.


இதில், புலவர்பாளையம் பஸ் ஸ்டாப் பின்புறம் உள்ள மளிகை கடையில் ஆய்வு மேற்கொண்டபோது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருடகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை பறிமுதல் செய்தனர்.மேலும், அதே பகுதியை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் ராமசாமி, 62 கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமி-ழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடை-களில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பரமத்தி இன்ஸ்பெக்டர் இந்திராணி எச்சரிக்கை விடுத்-துள்ளார்.

Advertisement