நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரியில் கூடுதல் கட்டடம் திறப்பு: எம்.பி., பங்கேற்பு

நாமக்கல்: நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய யமுனா விடுதி முதல் தளத்தில், எம்.பி., தொகுதி மேம்-பாட்டு நிதி, 75 லட்சம் ரூபாயில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்-டது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் செல்வராஜூ தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ராமலிங்கம் முன்-னிலை வகித்தார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலை-வரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்து பேசியதாவது:


நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலை-யத்தில், 75 லட்சம் ரூபாய் மதிப்பில், 16 அறைகள் கொண்ட கூடுதல் கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதில், 40 மாண-வியர்களுக்கான தங்கும் அறை மற்றும் பொது கழிவறையுடன் அமைந்துள்ளது.பல்வேறு மாநிலங்களில் இருந்து இக்கல்லுாரிக்கு மாணவியர்கள் பயில வருகை தருகின்றனர். இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க கல்லுாரியாகும். இங்கு, தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்-துடன் இணைந்து தானியங்கி தொழில்நுட்ப முறையில், பால் பண்ணை நிறுவப் படுகிறது. அதனால், உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப பாடப்பிரிவில் பயில்வதற்கு ஆர்வத்தை செலுத்தி, உங்களது எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement