வக்கீல் வெட்டிக்கொலை: 6 பேர்கோர்ட்டில் சரண்

1

திருப்பூர்: தாராபுரம் தனியார் பள்ளி அருகே சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வக்கீலின் உறவினர் மற்றும் கூலிப்படையை சேர்ந்த ஐந்துபேர் உள்ளிட்ட 6 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே பட்டப்பகலில் சென்னை ஐகோர்ட் வழக்கறிஞராக உள்ள முருகானந்தம் மீது அங்கு வந்த மர்மகும்பல் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது. தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில் அப்படியே சரிந்து முருகானந்தம் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தாராபுரம் டிஎஸ்பி சுரேஷ் குமார் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


விசாரணையில் பள்ளி கட்டிடம் தொடர்பான சொத்து பிரச்னை காரணமாக, இந்த படுகொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.



சரண் அடைந்தவர்கள் விபரம்:

தாராபுரத்தை சேர்ந்த தண்டபாணி பள்ளி தாளார்,திருச்சியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி, சேலம் வாழப்பாடியை சேர்ந்த ராம், நாமக்கல்லை சேர்ந்த சுந்தரம், திருச்சி தொட்டியத்தை சேர்ந்த நாகராஜன் மற்றும் தாரபுரம் வினோபாநகரை சேர்ந்த நட்டுதுரை ஆகிய 6 பேர் சரண் அடைந்தனர்.

Advertisement