சர்வதேச புலிகள் தினத்தில் தமிழகம் பெருமையுடன் கர்ஜிக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: சர்வதேச புலிகள் தினத்தில் தமிழகம் பெருமையுடன் கர்ஜிக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவு: தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தரவுகளின்படி 306 புலிகள் தற்போது உள்ளன. வன ஊழியர்கள் மற்றும் கடின நிலப்பரப்புகளில் வாழ்விடங்களை காக்கும் வேட்டை எதிர்ப்புக் குழுக்களின் தோள்களில் இந்த வெற்றி தாங்கி உள்ளது.
வனப்பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் நவீன உபகரணங்கள், தொழில்நுட்ப வசதிகள், கால்நடை மருத்துவர்களுடன், 1947 களப்பணியாளர் பணியிடங்களும் நிரப்பப்பட்டு உள்ளன.
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதன் மூலம் வன வாழ்விடங்கள், வன ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது.
குற்றங்களைத் தடுக்க, தமிழக வனத்துறை மற்றும் சிறப்புப் படையான வனவிலங்குகள் குற்றத்தடுப்புப் பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது. புலிகளை காப்பதன் மூலம், நாம் நமது வனத்தின் ஆன்மாவையும் பாதுகாக்கிறோம்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.











மேலும்
-
குப்பை பிரச்னையால் கலவர பூமியான இச்சிப்பட்டி
-
செவிலியரிடம் சில்மிஷம் பணியாளரிடம் விசாரணை
-
மாநகராட்சி பள்ளி மாணவர் சேர்க்கை: 3 மடங்கு அதிகரிப்பு
-
ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.,விடம் ரூ.11 லட்சம் நுாதன மோசடி
-
ஆகாய தாமரை, நாணல், முட்புதரால் பகிங்ஹாமில் நீரோட்டம் பாதிப்பு
-
தனியார் பள்ளியில் துப்பாக்கி சுடும் பயிற்சி; 8ம் வகுப்பு மாணவர் குண்டு பாய்ந்து காயம்