காஷ்மீர் பிரச்னை குறித்து பேசும்போதெல்லாம் நேருவை இழிவுபடுத்துவது ஏன்? கேட்கிறார் கார்கே!

44


புதுடில்லி: காஷ்மீர் பிரச்னை குறித்து பேசும்போதெல்லாம் நேருவை இழிவுபடுத்துவது ஏன்? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.


லோக்சபாவில் ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து நடந்த விவாதத்தின் போது, மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது: பஹல்காமில் பாதுகாப்புக் குறைபாடாலேயே பயங்கரவாதிகளின் குண்டுகளுக்கு மக்கள் உயிரிழந்தனர். பாதுகாப்பு குறைபாடு இல்லை என்றால் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது எப்படி? காஷ்மீர் பிரச்னை குறித்து பேசும்போதெல்லாம் நேருவை இழிவுபடுத்துவது ஏன்?


பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு வழிவகுத்த பாதுகாப்பு குறைபாடுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும். பாஜக எம்.பி.க்கள், அமைச்சர்கள் நமது பாதுகாப்பு படைகளை அவமதிக்கும் போது பிரதமர் மோடி ஏன் அமைதியாக இருக்கிறார். இது குறித்து ஏதும் கண்டுகொள்ளாமல் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? இவ்வாறு அவர் கூறினார்.

நட்டா கண்டனம்




பிரதமர் நரேந்திர மோடி குறித்த காங்கிரஸ் தலைவர் கார்கேவின் கருத்துகளை மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா கடுமையாக சாடியுள்ளார். அவர், கார்கேவின் உரையிலிருந்து அந்த வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

Advertisement