அமுத பெருவிழா பூங்கா ரூ.2.40 கோடியில் மேம்பாடு

அடையாறு, அடையாறு அமுத பெருவிழா பூங்காவில், தடுப்பு சுவர் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக, 2.40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

அடையாறு மண்டலம், 173வது வார்டு, ஓ.எம்.ஆர்., மத்திய கைலாஷ் ரயில் நிலையம் முதல், இந்திரா நகர் ரயில் நிலையம் வரை உள்ள காலி இடத்தில், அமுத பெருவிழா பூங்கா அமைக்கப்பட்டது.

இதில், பக்கவாட்டில் அமைத்த கம்பி வேலி பாதுகாப்பு இல்லாமல் உள்ளதால், அவற்றை அகற்றி, தடுப்பு சுவர் கட்ட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

அதேபோல், திறந்தவெளி மேம்பாட்டு பணியும் நடைபெற உள்ளது. இதற்காக, 2.40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. விரைவில், அதற்கான பணிகள் துவங்கும் என, அதிகாரிகள் கூறினர்.

Advertisement