சிவகாசி ரோட்டில் கட்டடக் கழிவுகள்

சிவகாசி; சிவகாசியிலிருந்து சாத்துார் செல்லும் ரோட்டில் ராமசாமிபுரம் பஸ் ஸ்டாப் அருகே ரோட்டில் கொட்டப்பட்டுள்ள கட்டடக் கழிவுகளால் வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்தில் உள்ளனர்.
சிவகாசியில் இருந்து சாத்துாருக்கு எண்ணற்ற வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் எப்பொழுதுமே இந்த ரோட்டில் போக்குவரத்து நிறைந்திருக்கும். இந்நிலையில் சிவகாசியில் இருந்து சாத்துார் செல்லும் வழியில் ராமசாமிபுரம் பஸ் ஸ்டாப் அருகே ரோட்டிலேயே கட்டடக் கழிவுகள், இரும்பு கம்பிகள் போடப்பட்டுள்ளது. இது ரோட்டை மறைத்துள்ளதால் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது.
எதிர் எதிரே வாகனங்கள் வரும்போது விலகிச் செல்ல முடியவில்லை. சிறிது கவனம் சிதறினாலும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. டூவீலரில் வருபவர்கள் மிகவும் தடுமாறுகின்றனர். எனவே இங்கு கொட்டப்பட்டுள்ள கட்டடக் கழிவுகள், இரும்பு கம்பிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
சிறுமியை கடத்தி திருமணம் தொழிலாளிக்கு '22 ஆண்டு'
-
கீழ்பவானி பாசன சிறப்பு நனைப்புக்கு இன்று முதல் 135 நாள் தண்ணீர் திறப்பு
-
ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்தவர் தற்கொலை
-
ரயிலில் இழுத்து செல்லப்பட்ட பயணியை காப்பாற்றிய வீரர்
-
என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை: போலி ஆர்.டி.ஓ., வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றக்கோரி கணவர் புகார்
-
'சிலிண்டர் வினியோகம் தடையின்றி தொடரும்'