கீழ்பவானி பாசன சிறப்பு நனைப்புக்கு இன்று முதல் 135 நாள் தண்ணீர் திறப்பு
ஈரோடு, பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி பாசனத்துக்கு இன்று முதல், 135 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் மூலம், கீழ்பவானி பாசன பகுதியில் இரு போகங்களாக, 2.07 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும். ஆக., 15ல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும்.
தற்போது அணை நிரம்பி வருவதுடன், நீர் வரத்தும் திருப்திகரமாக உள்ளதால், முன்னதாக திறக்க விவசாயிகள், பல்வேறு அமைப்பினர் கோரி வருகின்றனர்.
இதையேற்று, நீர் வளத்துறை செயலர் ஜெயகாந்தன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
பவானிசாகர் அணையில் இருந்து, 2025-26ம் ஆண்டு முதல் போக பாசனத்துக்கு, கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் இரட்டை படை மதகுகள், சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மூலம், 1 லட்சத்து, 3,500 ஏக்கர் பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்படுகிறது.
இதன்படி இன்று (31) முதல் ஆக., 14 வரை தினமும் வினாடிக்கு, 2,300 கனஅடி வீதம், 15 நாட்களுக்கு சிறப்பு நனைப்புக்கு, 2,980.80 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், ஆக., 15 முதல் டிச., 12 வரை, 120 நாட்களுக்கு முதல் போக நன்செய் பாசனத்துக்கு, 23,846.40 மில்லியன் கனஅடிக்கு மிகாமலும், மொத்தம், 135 நாட்களுக்கு, 26,827.20 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படும். அணையின் தற்போதைய நீர் இருப்பு, வரத்தை பொறுத்து, தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து
உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும்
-
4 ஆண்டு ராணுவ ஆட்சி முடிகிறது: மியான்மரில் தேர்தல் நடத்த திட்டம்
-
கன்னியாகுமரியில் ஓய்வுபெற்ற நாளில் ஓடியே வீட்டுக்கு வந்த எஸ்எஸ்ஐ
-
உலக விளையாட்டு செய்திகள்
-
அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் 'சஸ்பெண்ட்'
-
முன்னிலை பெற்றது நியூசிலாந்து: கான்வே, மிட்செல் அரைசதம்
-
பிரான்ஸ் வீரர் 'தங்கம்': உலக நீச்சல் போட்டியில்