ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்தவர் தற்கொலை



சேலம், சேலம், தளவாய்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 35. தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றினார். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். சதீஷ்குமார், ஆன்லைன் ரம்மி விளையாடி, பல லட்சம் ரூபாய் இழந்துள்ளார்.


இதனால் பல பேரிடம் கடன் வாங்கிய அவர், திருப்பி தரமுடியாமல் தவித்து வந்தார். இந்த மன வேதனையில் இருந்த சதீஷ்குமார் நேற்று காலை, வீட்டில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது சதீஷ்குமார் உயிரிழந்தார். இரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement