சிறுமியை கடத்தி திருமணம் தொழிலாளிக்கு '22 ஆண்டு'

திருப்பத்துார், திருப்பத்துார் அருகே, சிறுமியை கடத்தி திருமணம் செய்த தொழிலாளிக்கு, 22 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தொழிலாளி ராஜேந்திரன், 32. இவர், 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த, 2019 மார்ச், 21ல், கடத்திச்சென்று திருமணம் செய்து கொண்டார். ஆலங்காயம் போலீசார், சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த வழக்கில் ராஜேந்திரனை, போக்சோவில் கைது செய்தனர்.


இது குறித்த வழக்கு, திருப்பத்துார் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனாகுமாரி, நேற்று முன்தினம் மாலை ராஜேந்திரனுக்கு, 22 ஆண்டு சிறை மற்றும், 2,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Advertisement