கச்சிகுடா-மதுரை சிறப்பு ரயில் பண்ருட்டியில் நிற்கும் என அறிவிப்பு

பண்ருட்டி : திருச்சி-தாம்பரம், கச்சிக்குடா- மதுரை சிறப்பு ரயில் பண்ருட்டி ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்ருட்டியில் ரயில்வே ஸ்டேஷனில் சிறப்பு ரயில்கள் நின்று செல்ல கோரி பி.ஆர்.டி.ரயில் பயணிகள் சங்கம் சார்பில் ரயில்வே துணை இயக்கியவியல் மேலாளர் பிரபாகரிடம் கோரிக்கை விடுத்ததனர். அதன்பேரில், வரும் ஆக., 18ம் தேதி முதல் கச்சிகுடா (ைஹதராபாத்)- மதுரை சிறப்பு ரயில் திங்கள், புதன் கிழமைகளில் நின்று செல்லும் என, ரயில்வேதுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ரயில் (எண்- 07191) திங்கள் இரவு 8:30 க்கு கச்சிகுடாவில் இருந்து புறப்படும் ரயில் செவ்வாய் மாலை 4:43க்கு பண்ருட்டி வந்து சேரும். இங்கிருந்து புதன் அதிகாலை 1:20க்கு மதுரை செல்லும். மறுமார்க்கத்தில் வண்டி (எண்- 07192) புதன் காலை 10:40க்கு மதுரையில் இருந்து புறப்படும் ரயில் மாலை 6:03 க்கு பண்ருட்டி வந்து வியாழக்கிழமை மதியம் 1:25க்கு கச்சிகுடா செல்லும்.

இந்த ரயில் சித்தூர், காட்பாடி, வேலுார் கன்டோன்மென்ட், திருவண்ணாமலை, விழுப்புரம், பண்ருட்டி, கடலூர் துறைமுகம், சிதம்பரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதேப் போன்று, திருச்சி-தாம்பரம் ரயில் ஆக., 1 முதல், 31ம் தேதி வரை திங்கள், வியாழன் தவிர்த்து மற்ற நாட்களில் பண்ருட்டியில் நின்று செல்லும்.

Advertisement