கழிவுநீர் கால்வாய் கட்ட கோரிக்கை

பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் ஊராட்சி பிடாரி அம்மன் கோவில் அருகே, 25க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைக்கு வருகிறது.


இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அந்த வழியே கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். குடியிருப்பு மற்றும் சாலையில் கழிவுநீர் தேங்காதபடி, கால்வாய் கட்டி வெளியேற்ற, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement