அ.தி.மு.க., - ஐ.டி., அணிக்கு புறநகர் மா.செ., அறிவுரை
ஆத்துார், ஆத்துார், கெங்கவல்லி, ஏற்காடு, வீரபாண்டி சட்டசபை தொகுதிகள், அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூட்டம், ஆத்துாரில் நேற்று நடந்தது. தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார்.
அதில் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது:
வரும், 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றிக்கு, தகவல் தொழில்நுட்ப அணி பிரசாரம் தான் கூடுதல் வலுசேர்க்கும். ஓட்டுச்சாவடிக்கு அமைத்துள்ள வாட்ஸாப் குழுவில், அ.தி.மு.க., ஆட்சி சாதனைகள், தி.மு.க., ஆட்சியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, தகவல் பகிர வேண்டும். சமூக வலைதளம், களத்திலும் தீவிரம் காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
எம்.எல்.ஏ.,க்களான, ஆத்துார் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி, ஒன்றிய, நகர, பேரூர் செயலர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
4 ஆண்டு ராணுவ ஆட்சி முடிகிறது: மியான்மரில் தேர்தல் நடத்த திட்டம்
-
கன்னியாகுமரியில் ஓய்வுபெற்ற நாளில் ஓடியே வீட்டுக்கு வந்த எஸ்எஸ்ஐ
-
உலக விளையாட்டு செய்திகள்
-
அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் 'சஸ்பெண்ட்'
-
முன்னிலை பெற்றது நியூசிலாந்து: கான்வே, மிட்செல் அரைசதம்
-
பிரான்ஸ் வீரர் 'தங்கம்': உலக நீச்சல் போட்டியில்
Advertisement
Advertisement