பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் சீருடை வழங்கல்

புதுச்சேரி : புதுச்சேரி வ.உ.சி., அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சீருடையை, அமைச்சர் லட்சுமிநாராயணன் வழங்கினார்.

நிழ்ச்சிக்கு பள்ளி துணை முதல்வர் சாந்தகுமாரி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் லட்சுமிநாராயணன், மாணவர்களுக்கு இலவச சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள், குறிப்பேடுகள் வழங்கினார்.

தொடர்ந்து,பல்வேறு போட்டிக்களில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி, பாராட்டினார்.பள்ளிக்கு தேவையான புதிய வகுப்பறைகள், மதில் சுவர், கழிப்பறை, வேதியியல் ஆய்வகத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், பழைய கட்டட வளாகத்தை புதுப்பித்து தர வேண்டும் என, அமைச்சரிடம் பள்ளி முதல்வர் கோரிக்கை வைத்தார்.ஆசிரியர் ஸ்ரீதரன், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement