காஷ்மீரில் பாக்., பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் ஊடுருவலை கண்டறிந்தனர். அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயற்சித்தனர்.
இதையடுத்து, பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இது குறித்து பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது: பூஞ்ச் பகுதியில் ஊடுருவல் முயற்சியை முறியடித்த போது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 2 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை தொடர்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
சில தினங்களுக்கு முன், பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் உட்பட பயங்கரவாதிகள் 3 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும்
-
பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கு பாதுகாப்பு தர வானதி கோரிக்கை
-
பிரிட்டனுக்கான ஆடை ஏற்றுமதி: மூன்று ஆண்டில், 2 மடங்கு உயரும்!
-
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் வீடுகளுக்கு தீவைப்பு
-
'அமைதிக்கான தலைவன் நான்' : அதிபர் டிரம்ப் தம்பட்டம்
-
போதை கும்பல் துப்பாக்கி சூட்டில் 17 பேர் பலி
-
நெல்லை இளைஞர் ஆணவக்கொலை; கைதான வாலிபர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!