அடிமையாக சென்றோரின் சந்ததியினருக்கு குடியுரிமை
போர்ட்டோ நோவோ: மேற்கு ஆப்ரிக்க நாடான பெனின், தன் நாட்டைச் சேர்ந்த அடிமை சந்ததியினருக்கு குடியுரிமை அளிக்கத் துவங்கிஉள்ளது.
அட்லாண்டிக் அடிமை வர்த்தகம் என்பது வரலாற்றில் அறியப்பட்ட மிகப்பெரிய மற்றும் கொடூரமான அடிமை வர்த்தகமாகும். இதில், மனிதர்கள் சொத்தாக வாங்கப்பட்டு விற்கப்பட்டனர்.
அவர்களின் சுதந்திரம், உரிமைகள் பறிக்கப்பட்டு, பயங்கரமான சூழ்நிலைகளில் அடிமைத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதன்படி மேற்கு ஆப்ரிக்க நாடான பெனி னில், 18 மற்றும் 19ம் நுாற்றாண்டுகளில் மன்னர் ஆட்சியின்போது, போர்த்துகீசிய, பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் வணிகர்களுக்கு அடிமைப்படுத்தப்பட்ட மக்களைப் பிடித்து விற்பது தீ விரமாக இருந்தது.
அடிமை வர்த்தகத்தில் அ தன் பங்கை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ள பெனின், அதை ஈடுசெய்யும் விதமாக, அடிமைகளாக வெளிநாடுகளுக்குச் சென்ற 15 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் சந்ததியினருக்கான குடியுரிமை வழங்கும் சட்டத்தை அ மல் படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், அமெரிக்காவைச் சேர்ந்த, கிராமி விருது வென்ற பிரபல பாடகி சியாராவுக்கு முதல் முறையாக குடியுரிமை வழங்கப்பட்டது. பெனினில் தற்போதைய மக்கள் தொகை, 1.41 கோடி யாகும்.
மேலும்
-
ஆண்கள் மட்டும் வழிபடும் விழா வரும் 3ல் கிடா வெட்டி விருந்து
-
ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார் விலை உயர்வு
-
விசாரணைக்கு நாங்கள் அழைத்து வரவில்லை திருப்புவனம் போலீசார் தகவல்
-
ஓடப்பள்ளி தடுப்பணை பாலத்தில் பராமரிப்பு பணி
-
3 நாட்கள் தொடர் விடுமுறை அவசியமாகிறது சிறப்பு ரயில்
-
புதர் மண்டிய இரட்டை வாய்க்கால்: விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரிப்பு