ஓடப்பள்ளி தடுப்பணை பாலத்தில் பராமரிப்பு பணி

பள்ளிப்பாளையம், ஓடப்பள்ளி தடுப்பணை பாலத்தில், பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே ஓடப்பள்ளி பகுதியில், காவிரி ஆற்றின் குறுக்கே, மின் உற்பத்தி செய்வதற்காக, தடுப்பணை கட்டப்பட்டடு, 2011ம் ஆண்டு நவம்பரில் மின் உற்பத்தி துவக்கப்பட்டது.

அதற்காக, இரண்டு யூனிட் அமைத்து தடுப்பணையில், 18 ஷட்டர்களும் அமைக்கப்பட்டது. தடுப்பணை நீர் தேக்கம் பகுதியில், 10 கி.மீ., துாரத்திற்கு 9 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, ராட்சத ஜெனரேட்டர் மூலம், தலா, 15 வீதம், 30 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அடிப்படையில் மின் உற்பத்தி ஏற்றம், இறக்கத்துடன் காணப்படும். தடுப்பணையின் மேல் பகுதியில் வாகனங்கள் செல்லும் வகையில், பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை பாலத்தின் வழியாக லாரி, கார், சரக்கு வாகனம், டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் ஈரோடு, சோலார், கரூர், கொடுமுடி, திருச்செங்கோடு பகுதி
களுக்கு சென்று வருகிறது. பாலத்தின் மேற்பரப்பில் உள்ள கான்கிரீட் தளம் இணைக்கும் பகுதி சேதமடைந்து காணப்பட்டது. இதையடுத்து அந்த இடத்தை, புதுப்பித்து சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

Advertisement