தாராபுரம் வக்கீல் கொலை வழக்கு: சேலத்தில் 2 பேர் சுற்றிவளைப்பு
சேலம், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் முருகானந்தம், 35. சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றினார். இவரது தந்தை லிங்கசாமி, 15 ஆண்டுக்கு முன் கூலிப்படையால் வெட்டி கொல்லப்பட்ட வழக்கு, ஈரோடு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் முருகானந்தம் சித்தப்பா தண்டபாணி உள்பட சிலர், போதிய ஆதாரம் இல்லாதால் விடுவிக்கப்பட்டனர்.
இதனால் தண்டபாணிக்கு தண்டனை பெற்றுத்தர எண்ணிய முருகானந்தம் மேற்கொண்ட நடவடிக்கையால், தண்டபாணி நடத்தும் மெட்ரிக் பள்ளி சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக, கோர்ட் மூலம் இடித்து தகர்க்கப்பட்டது. இதுதொடர்பாக பள்ளி உறுதி தன்மையை பார்வையிட கடந்த 28ல் முருகானந்தம், அவரது வக்கீல் தினேஷ், 35, உள்பட, 4 பேர் சென்றபோது அங்கிருந்த கூலிப்படையினர் முருகானந்தத்தை வெட்டினர்.
இதில் அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தாராபுரம் போலீசார் விசாரித்த நிலையில், பள்ளி தாளாளர் தண்டபாணி
உள்பட, 6 பேர் போலீசில் சரணடைந்தனர். தலைமறைவாக உள்ள கூலிப்படையை சேர்ந்த சிலரை தனிப்படையினர் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை, சேலம், கோரிமேட்டில், கூலிப்படையை சேர்ந்த, நாமக்கல் சசிகுமார், பாலமுருகன் இருந்தனர். சேலம், கன்னங்குறிச்சி போலீசார், 2 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
மேலும்
-
4 ஆண்டு ராணுவ ஆட்சி முடிகிறது: மியான்மரில் தேர்தல் நடத்த திட்டம்
-
கன்னியாகுமரியில் ஓய்வுபெற்ற நாளில் ஓடியே வீட்டுக்கு வந்த எஸ்எஸ்ஐ
-
உலக விளையாட்டு செய்திகள்
-
அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் 'சஸ்பெண்ட்'
-
முன்னிலை பெற்றது நியூசிலாந்து: கான்வே, மிட்செல் அரைசதம்
-
பிரான்ஸ் வீரர் 'தங்கம்': உலக நீச்சல் போட்டியில்