எஸ்' வளைவு சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?

நாமக்கல், மோகனுார் காவிரி ஆற்றுக்கிடையே உள்ள வாங்கல் பலம் வழியாக கரூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து நாமக்கல், சேலம் ஆகிய பகுதிகளுக்கு, இரவு, பகல் என எந்நேரமும் ஏராளமான வாகனங்கள் சென்றுவருகின்றன. அவ்வாறு செல்லும் வாகனங்கள், மோகனுார்-நாமக்கல் சாலையில், வரகூர் பிரிவு சாலையில், அறிஞர் அண்ணா அரசு கல்லுாரி, மாணவர் விடுதி, தனியார் கல்லுாரி, பள்ளிகள் மற்றும் வனத்துறை அலுவலகம் ஆகியவை கடந்து செல்லவேண்டும்.

இந்நிலையில், மாணவர் விடுதி அடுத்துள்ள தனியார் கல்லுாரி அருகே, 'எஸ்' வளைவு சாலை அமைந்தள்ளது. அப்பகுதியில் அசுர வேகத்தில் வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.
அவ்வாறு நடக்கும் வாகன விபத்தை தடுக்கும் வகையில் அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் அல்லது பேரிகார்டுகள் வைத்து எச்சரிக்கை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement