பொருள் மீட்பு மையம் திறப்பு

தாரமங்கலம், தாரமங்கலம் நகராட்சிக்குட்பட்ட, 4 வார்டுகளில் சமுதாய கழிப்பிடம் கட்ட, துாய்மை பாரத இயக்க திட்டத்தில், 75.81 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதில், 4, 16, 22, 25 ஆகிய வார்டுகளில் கழிப்பிடம் கட்டும் பணி நிறைவடைந்ததால், நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு, நகராட்சி தலைவர் குணசேகரன் திறந்து வைத்தார்.


தொடர்ந்து கீழ் சின்னா கவுண்டம்பட்டியில் துாய்மை பாரத இயக்க திட்டத்தில், 42.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பொருள் மீட்பு மையத்தை திறந்து வைத்தார்.
துணைத்தலைவர் தனம், கவுன்சிலர்கள், தி.மு.க, பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement