தமிழகத்தில் இனி நடக்க கூடாது; கவின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த நயினார் பேட்டி

46


தூத்துக்குடி: இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் இனி நடைபெறாமல் இருக்க வேண்டும் என கவின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த பின் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


திருநெல்வலேியில் ஆணவக்கொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்திற்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்பி மற்றும் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் நேரில் ஆறுதல் தெரிவித்தனர்.

பின்னர் நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: இளைஞர் கவின் படுகொலை செய்யப்பட்டு இருப்பது மிகவும் கண்டிக்கதகுந்தது. மிகவும் வருந்ததக்கது. இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் இனி நடைபெறாமல் இருக்க வேண்டும்.



அதற்காக அரசாங்கம் தனியாக ஒரு சட்டமே கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசை கேட்டு கொள்கிறேன். சம்பந்தபட்ட நபர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை.


இது போன்ற நிகழ்வுகளை தடுப்பதற்கு அந்தந்த மாவட்ட எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கம் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

Advertisement