ஒரே விமானம்... 5 முறை பயணம் ஒத்திவைப்பு; டில்லி விமான நிலையத்தில் பயணிகள் போராட்டம்

9


புதுடில்லி: ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் சேவை ஒரே நாளில் 5 முறை ஒத்திவைக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த பயணிகள் டில்லி விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

டில்லி விமான நிலையத்தில் இருந்து நேற்ற மதியம் 1.10 மணிக்கு ஆமதாபாத் நோக்கி ஸ்பைஸ் ஜெட் விமானம் புறப்பட இருந்தது. ஆனால், செயல்பாட்டு சிக்கல் காரணமாக விமான சேவை தாமதமாகும் என்று விமான ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்பிறகு, பிற்பகல் 3.40 மணி முதல் இரவு 9.30 மணி வரை என தொடர்ச்சியாக 5 முறை பயண நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால், கோபமடைந்த பயணிகள் டில்லி விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பயணி ஒருவர் கூறுகையில்,"பயணிகளின் அழுத்தம் காரணமாக, எங்களுக்கு சில அடிப்படை உதவிகள் செய்து கொடுத்தார்கள். ஆனால், அடுத்து ஆமதாபாத் செல்லும் விமானம் குறித்து அவர்கள் எந்த தகவலையும் கொடுக்கவில்லை," எனக் கூறினார்.

Advertisement