ஓபிஎஸ் விலகியதால் பலவீனமா; நயினார் நாகேந்திரன் பதில்

10


மதுரை: '' பாஜ கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது பலவீனமா என்பது குறித்து தேர்தலில் தான் தெரியும்,'' என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்


மதுரை விமான நிலையத்தில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: ஓபிஎஸ் உடன் ஏற்கனவே போனில் பேசியிருந்தேன். ஆனால், என்ன முடிவெடுத்தார்கள் என தெரியவில்லை. வெளியே போவதாக அறிவிப்பு வந்துள்ளது. சட்டசபையிலும் பேசினோம். ஏற்கனவே போனிலும் பேசிக் கொண்டு இருக்கிறோம். சொந்த பிரச்னையா அல்லது வேறு பிரச்னையா என தெரியவில்லை. என்னிடம் சொல்லியிருந்தால் பிரதமரை ஓபிஎஸ் சந்திக்க அனுமதி வாங்கி கொடுத்து இருப்போம் என முன்னரே கூறியிருந்தேன்.


ஓபிஎஸ்ஐ பிரதமர் புறக்கணிக்க இபிஎஸ் அழுத்தம் ஏதும் கொடுக்கவில்லை. அவர் அறிக்கை வெளியிடுவதற்கு முன்பு அவரிடம் பேசியிருந்தேன். எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என கேட்டு கொண்டேன். தினகரனிடமும் பேசினோம். ஓபிஎஸ் முடிவு குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். அவர்கள் முடிவுக்கு நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது. அவர் விலகியதால் பலவீனமா என்பது குறித்து தேர்தல் தான் தெரியும்.


முதல்வரை எதற்காக ஓபிஎஸ் சந்தித்தார் எனத் தெரியாது. முதல்வரை சொந்தப் பிரச்னைக்காக கூட சந்தித்து இருக்கலாம். முதல்வரை எனது பிரச்னைக்காக நான் கூட சந்திக்கலாம். கட்சி என்பது வேறு சந்திப்பு என்பது வேறு. அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். சேர்ந்துள்ளாரா இல்லையா என அறிவித்தால் தான் கருத்து சொல்ல முடியும். ஒரு வேளை சொந்த பிரச்னைக்காக சந்தித்தோம் என சொன்னால் என்ன செய்ய முடியும். வரும் காலத்தில் ஓபிஎஸ் கேட்டுக் கொண்டால் பிரதமரை சந்திப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement