இந்திய ஜோடி 2வது இடம்: 'ஸ்டார் கன்டென்டர்' டேபிள் டென்னிசில்

பரானா: 'ஸ்டார் கன்டென்டர்' டேபிள் டென்னிஸ் இரட்டையரில் இந்தியாவின் மானவ்-மனுஷ், தியா-மனுஷ் ஜோடிகள் 2வது இடம் பிடித்தன.
பிரேசிலில், 'ஸ்டார் கன்டென்டர்' டேபிள் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் மானவ் தக்கார், மனுஷ் ஷா ஜோடி, ஜெர்மனியின் பெனடிக்ட் டுடா, டாங் கியு ஜோடியை சந்தித்தது. இதில் மானவ், மனுஷ் ஜோடி 2-3 (3-11, 11-7, 7-11, 15-13, 5-11) என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்து 2வது இடத்தை கைப்பற்றியது.
கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் மனுஷ் ஷா, தியா ஜோடி 2-3 (4-11, 11-8, 11-5, 5-11, 2-11) என்ற கணக்கில் ஜப்பானின் சாடோஷி, ஹோனோகா ஹஷிமோட்டோ ஜோடியிடம் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மணிகா பத்ரா, ஜப்பானின் ஹோனோகா ஹஷிமோட்டோ மோதினர். இதில் ஏமாற்றிய மணிகா 0-3 (7-11, 6-11, 7-11) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
மேலும்
-
நாட்டை காக்கும் வீரர்களை பாருங்க... கிரிக்கெட்டில் பணிச்சுமையை மறந்துடுங்க * இந்திய அணிக்கு கவாஸ்கர் 'அட்வைஸ்'
-
'ராக்கெட்லன்': இந்தியா சாம்பியன்
-
டென்னிஸ்: அரையிறுதியில் ரிபாகினா
-
மனுஷ்-தியா ஜோடி 'நம்பர்-7' * டேபிள் டென்னிஸ் தரவரிசையில்...
-
ஆசிய கூடைப்பந்து: இந்தியா ஏமாற்றம்
-
கால்பந்து: இந்தியன் ஆர்மி அபாரம்