வெள்ளை மாளிகை பெண் அதிகாரியை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்

11

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் குறித்து அதிபர் டொனால்டு டிரம்ப் வர்ணித்து பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட். 27 வயதான லீவிட், டிரம்பின் ஐந்தாவது பத்திரிகையாளர் செயலாளராகவும், அவரது இரண்டாவது பதவிக் காலத்தின் முதல்வராகவும் உள்ளார்.


சமீபத்தில் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, கரோலின் லீவிட், “ஆறு மாதங்களுக்கு முன்பு பதவியேற்றதிலிருந்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒரு சமாதான ஒப்பந்தம் அல்லது போர்நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்துள்ளார்.
அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்.


இது தொடர்பாக ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு டிரம்ப் அளித்த பதில் வருமாறு : கரோலின் லீவிட் மிகவும் பிரபலமானவராக மாறிவிட்டார். அந்த முகமும், அந்த மூளையும், அந்த உதடுகளும். அவை அசையும் விதமும் ஒரு இயந்திர துப்பாக்கி போல் செயல்படுகின்றன.
கரோலின் லீவிட் மிகச்சிறந்த பெண்மணி. அவரை விட மிகச்சிறந்த ஊடக செயலாளர் இருக்க முடியாது. இவ்வாறு டிரம்ப் கூறினார்.


வெள்ளை மாளிகையில் பணியாற்றும் ஒரு பெண் அதிகாரி குறித்து டிரம்ப் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
டிரம்பின் கருத்துக்கள் அருவருப்பானவை என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement