உலக விளையாட்டு செய்திகள்

பிரேசில் சாம்பியன்
கியூட்டோ: ஈகுவடாரில் நடந்த பெண்கள் 'கோபா அமெரிக்கா' கால்பந்து பைனலில் கொலம்பியா, பிரேசில் அணிகள் மோதின. பிரேசில் அணி 5-4 என, 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் 'திரில்' வெற்றி பெற்று, 9வது முறையாக கோப்பை வென்றது.
ஸ்பெயின் கலக்கல்
பெல்கிரேடு: செர்பியாவில் நடக்கும் 'யூரோ' கூடைப்பந்து (18 வயது) அரையிறுதியில் ஸ்பெயின் அணி 84-62 என்ற கணக்கில் இத்தாலி அணியை வென்றது. மற்றொரு அரையிறுதியில் பிரான்ஸ் அணி 92-63 என லாட்வியாவை தோற்கடித்தது.
பைனலில் பிரான்ஸ்
டாஷ்கென்ட்: உஸ்பெகிஸ்தானில் நடக்கும் ஆண்களுக்கான (19 வயது) உலக வாலிபால் சாம்பியன்ஷிப் அரையிறுதியில் பிரான்ஸ் அணி 3-1 என்ற கணக்கில் ஈரானை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் போலந்து அணி 3-0 என, ஸ்பெயினை வென்றது.
போர்ச்சுகல் ஏமாற்றம்
மாடோசின்ஹோஸ்: போர்ச்சுகலில் நடக்கும் பெண்கள் (20 வயது) 'யூரோ' கூடைப்பந்து லீக் போட்டியில் பிரான்ஸ், போர்ச்சுகல் அணிகள் மோதின. சொந்த மண்ணில் ஏமாற்றிய போர்ச்சுகல் அணி 50-91 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
எக்ஸ்டிராஸ்
* டில்லியில் நடந்த தகுதிப் போட்டியில் அசத்திய இந்தியாவின் அன்டிம் பங்கல் (53 கி.கி.,), வைஷ்ணவி பாட்டீல் (65 கி.கி.,), மணிஷா பன்வாலா (62 கி.கி.,), உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடருக்கான (செப். 13-21, குரோஷியா) இடத்தை உறுதி செய்தனர்.
* கோல்கட்டாவில் நடந்த துாரந்த் கோப்பை கால்பந்து லீக் போட்டியில் நாம்தாரி எப்.சி., அணி 4-2 என்ற கோல் கணக்கில் இந்திய விமானப்படை அணியை வீழ்த்தியது.
* உத்தரகாண்ட்டின் டேராடூனில், வரும் ஆக. 20-23ல் ஆசிய ஓபன் 'ஷார்ட் டிராக் ஸ்பீடு ஸ்கேட்டிங் டிராபி' முதன்முறையாக நடக்கவுள்ளது.
* தாய்லாந்தில் நடக்கும் ஆசிய குத்துச்சண்டை (19 வயது) சாம்பியன்ஷிப் முதல் சுற்றில் இந்தியாவின் ஷிவம் (55 கி.கி.,), மவுசம் சுஹாக் (65 கி.கி.,) வெற்றி பெற்றனர்.
* பீஹாரில், வரும் ஆக. 9-10ல் ஆசிய ரக்பி எமிரேட்ஸ் (20 வயது) தொடர் நடக்கவுள்ள. இத்தொடரில் பங்கேற்கும் இந்திய ஆண்கள் அணிக்கு சுமித் குமார் ராய், பெண்கள் அணிக்கு பூமிகா சுக்லா கேப்டனாக நியமிக்கப்பட்னர்.
* பெங்களூருவில், ஜூனியர் தேசிய அக்குவாடிக்ஸ் சாம்பியன்ஷிப் 51வது சீசன் இன்று துவங்குகிறது. இதில் 22 மாநிலங்களை சேர்ந்த, 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
மேலும்
-
நாட்டை காக்கும் வீரர்களை பாருங்க... கிரிக்கெட்டில் பணிச்சுமையை மறந்துடுங்க * இந்திய அணிக்கு கவாஸ்கர் 'அட்வைஸ்'
-
'ராக்கெட்லன்': இந்தியா சாம்பியன்
-
டென்னிஸ்: அரையிறுதியில் ரிபாகினா
-
மனுஷ்-தியா ஜோடி 'நம்பர்-7' * டேபிள் டென்னிஸ் தரவரிசையில்...
-
ஆசிய கூடைப்பந்து: இந்தியா ஏமாற்றம்
-
கால்பந்து: இந்தியன் ஆர்மி அபாரம்